Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

தூத்துக்குடி மாவட்ட 1வது டிவிசன் லீக் போட்டி

தூத்துக்குடியில் கிரிக்கெட் நிகழ்வு

 

தூத்துக்குடி 1வது பிரிவு

 

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க சின்னம்
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம்

 

 

அறிக்கை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) – தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க 1வது பிரிவு போட்டிகளில்

  • SDR கிரிக்கெட் கிளப் அணி TRC ‘A ‘ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • செகண்ட்ஸ் ‘A’ அணி யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

 

 

 

சிறந்த வீரர் / பங்களிப்பு

 

  • Y .M ஆசிப் 3 விக்கெட்கள் வீழ்த்தி 74 ரன்கள் எடுத்து SDR கிரிக்கெட் கிளப் அணியின் வெற்றிக்கு அடிகோலினார்.
  • செகண்ட்ஸ் ‘A ‘ அணியின் வெற்றியில் ஸ்டேன்லி, ஜெயகணேஷ் மற்றும் கார்த்திக் நன்கு மட்டை பிடித்தும் ஜான் செல்வக்குமார் பந்து வீச்சிலும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்

 

 

 

சுருக்கமான போட்டி விபரம்

போட்டி: TRC ‘A’ அணி {எதிர்} SDR கிரிக்கெட் கிளப்

விபரம்: முதலில் பேட் செய்த TRC ‘A’ அணி 30.3 ஓவரில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.  அணியில் கே.ராம்குமார் அதிக பட்சமாக 39 ரன்களும் கோவிந்தராஜன் 31 ரன்களும் எடுத்தனர்.  SDR கிரிக்கெட் கிளப் அணியின் Y .M .ஆசிப் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும், பிரதீப் 51 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் அதிசயராஜ் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இரண்டாவது பேட் செய்த SDR கிரிக்கெட் கிளப் அணில் 21.3 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டும் இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.Y .M ஆசிப் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.டி.மணி கிருஷ்ணன் 27 ரன்கள் எடுத்தார்.

 

 

போட்டி: செகண்ட்ஸ் ‘A’ அணி {எதிர்} யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப்

விபரம்: செகண்ட்ஸ் ‘A’ அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ரன்கள் குவித்தது! செகண்ட்ஸ் அணியின் A. ஸ்டான்லி, J .ஜெயகணேஷ் மற்றும் D.கார்த்திக் சிறப்பாக விளையாடி முறையே 88 ரன்கள், 61 ரன்கள் மற்றும் 50 ரன்கள் எடுத்தனர்.கடினமான இலக்கை விரட்டிய யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியின் சந்தான ராஜ் அதிகபட்சமாக 39 ரன்களும் P.பாஸ்கர் 31 ரன்களும் எடுத்தனர். செகண்ட்ஸ் ‘A’ அணியின் R.ஜான் செல்வக்குமார் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களையும் V.சந்தான சேகர் 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

 

இது போன்றே பிற தூத்துக்குடி மாவட்ட 1வது பிரிவு கிரிக்கெட் லீக் போட்டிகளின் விபரம் அறிய இங்கே சொடுக்கவும்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *