Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

தலைவா!!!

தலைவா - Leader

Story Highlights

  • ஒருகை ஓசை உலகை திருப்பாது!
  • உங்கள் கரம் சேர்ப்பீர்களா?

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

நீண்ட நாட்களாகவே எழுத நினைத்த விசயம். இனியும் தாமதித்தால் தவறாகி விடுமோ என்ற எண்ணமே இப்பதிவு!

தவறாகி விடுமா? என்ன தவறாகும்? என்ற உங்கள் கேள்வி நிச்சயம் எனக்கு புரிகிறது.

ஆனால் சூழ்நிலையை நீங்களும் உணரும்போது நிச்சயம் தவறாகத்தான் போயிருக்கும் என்பதை நீங்களே ஏற்றுகொள்வீர்கள்!

 

மேலும் தாமதிக்காமல் விசயத்திற்கு வருவோம்!
தலைப்பு என்ன?

தலைவா!

யார் தலைவன்?

எனக்கு சமீப காலமாக நிகழும் செயல்கள் குறித்து நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள் உள்ளன!

தலைவன் யார் என்பது இருக்கட்டும்!

 

அவனது தொண்டன் யார்?

 

உங்களில் ஒருவர் / சிலர் / பலர் , நம்மில் ஒருவர் / சிலர் / பலர் தூக்கிவிட்டால், உயர்த்திப் பேசினால், மதித்தால் அப்பொழுது நாம் அவரின் தொண்டரென்று ஆகிவிடுவோமா?

இல்லை!

நாம் அல்லது நம்மில் சிலர் / பலர் ஒருவரை பின்பற்றினால் அவர் கொள்கைவழி நடந்தால், அவர் நமது தலைவரென்று அறியப்படுவார்!

 

இங்கே நமது பாரதத்தில் நிறைய தலைவர்கள் உள்ளனர். மொழியால், ஜாதியால், இனத்தால், மாநிலத்தால், கட்சியால், சமயத்தால், தொழிலால் பல குழுக்கள் உள்ளன! அதற்கு தலைவர்களும் உள்ளனர்.

 

ஆனால் அடிப்படையில் தலைவனுக்குண்டான தகுதிதான் என்ன?

 

மறுபடியும் சுற்றி சுற்றி பிரச்சினை பணத்தை சுற்றித்தான் வரும்!

அதை சற்று மறந்து, மன்னித்து சமூகத்திற்கான முதல் அடிப்படைத் தேவையை பார்ப்போம்!

 

மனித இனம் மண்ணில் வாழவே தெரியாத காலத்திலேயே, அரசமைத்து, விதி செய்து, நல்வினை செய்து, வாழ்நெறி முறை கொண்டு வந்து, அன்பால், அன்பை, பண்பை, உயிராய், உணர்வாய் போற்றி, தவறுக்கும் பதில் செய்து, பகை அழித்து வாழ்ந்த இனம், நமது பாரத இனம் என்றால் அது மிகை அல்ல!

 

 

ஆங்கிலேயன் தான் இந்த இந்தியாவை ஒருங்கிணைத்து கொடுத்தான் என்பதும் திட்டமிட்டு பரப்பப்படும் விசமங்களே!

பல பிராந்தியங்களாய் பரந்து விரிந்திருந்தாலும் நட்பு பாராட்டி மாபெரும் சாம்ரஜ்யங்களாகவே இப்பாரதம் திகழ்ந்தது!

நமது பண்டைய கால பண்பாடானது உலகிற்கே முன்னோடியாய் திகழ்ந்தது என்பதில் நமக்கு ஐயமிருந்தால் நாம் முழுவதுமாய் மாற்றானின் காலடியில் வீழ்ந்து விட்டோம் என்பதே அர்த்தம்.

இத்தேடலில் நாம் தொட்டும் தொடாமலும் செல்லும் பல விசயங்கள் தனிப்பட்ட விவாதத்திற்குட்பட்டவை. பிறிதோர் சமயம் அவற்றையும் காண்போம்.

அவ்வாறு சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த இனம் தலையின்றி முண்டமாய் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

பெரும்பான்மை நல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒளிந்தோடி வாழ்ந்து வந்த கயமைத்தனம் என்று அரியணை அடைந்ததோ, அன்றே நம்மை இருள் சூளும் நிலை உருவானது.

உழைப்பின் பயனாய் அடையவேண்டியவற்றை, அவ்விருளில், அரசியல் செய்தோர் அறம் தவறி அனுபவிக்க, அதுவே வழியானது, பின் வழக்கானது. உழைத்த மக்கள் கூட, ஊழல் என்ற புது சூத்திரம் கண்டறிந்தனர்.

தலைவா
தலைவா

 

அரசன் எவ்வழி! குடி அவ்வழி! அரசியல் செய்தோர் பொதுப்பழி செய்தனர். குடிகளோ வலிப்பழி செய்தனர். காலமும் காட்சியும் மாறின.

இப்போது கயவர்கள் கோலோச்சி வருகின்றனர். நல்லவர்கள் ஒளிந்தோடி வாழும் நிலை வந்தது. இப்போது நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர் காலடியில் பள்ளம் பறித்துக்கொண்டே நீதி, நேர்மை பேசுகின்றோம்.

பெரும்பான்மையான மக்கள், இலவச பிச்சைகளுக்கு வரிசை சேரும் அவசரத்தில் தங்கள் கோவணத்தின் நூலறுந்தே தமக்கு கயிறு கிடைப்பதையும் கூட புரிந்து கொள்ளவில்லை.

ஆக, இப்படிப்பட்ட, சுயநலம் மட்டுமே பிரதானமாக, உழைக்காமல் உலகில் வாழ முயலும் சோம்பேறிகளாய், மக்கள் இருக்கும் போது, அவர்களிலிருந்து எப்படி ஒரு நல்லவரை தலைவராய் எதிர்பார்க்க முடியும்.

அதற்காக அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் கயவர்கள் என்றாகி விடுமா? ஐயா சாமி! ஆள விடுங்க! தற்காலத்தில் அரசியலில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் மாண்பு நெறி  தவறியவர்களே! யார் அந்த மீதி 10 சதவீதம் பேர் என்பதும் அவர்களில் எவ்வளவு பேர் உண்மையாகவே மக்கள் பணியாற்றும் நோக்கில் வந்தவர்கள் என்பதும் கேள்வியே!

 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்! ஆட்சி செய்யும் துறைகளில் திறமையற்றவர்கள், தகுதியற்றவர்கள், கயவர்கள் வந்ததும் அவர்களின் ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்காததும் மற்றவர்களுக்கு வசதியாகப் போயிற்று.

பெரும்பான்மையான ஆட்சியாளர்கள் பொதுச்சொத்தை களவாடுவதிலேயே குறியாய் இருந்ததும், மக்களும் பொதுவில் இலவசப் பிச்சைகளுக்கு கையேந்தி நின்றதும் அரச இயந்திரத்தின் இதயமாய், மூளையாய் செயல்படும் அதிகாரிகளுக்கும் வசதியாய்ப் போயிற்று. இப்பழமொழி கூறும் கூத்தாடிகளில் இவர்களே முதன்மையானவர்கள்.

இதை உரைக்கும் போதே ஓர் ஆன்மீக தாத்பரியம் நினைவிலாடுகிறது. எங்கும் எதிலும் இறையே! ஆம்! ஆட்சி பீடத்தில், ஆட்சியின் இயக்கத்தில், ஆட்சியின் பலனில் அனைத்திலும் இருப்பது யார்?

மக்களே!

எனவே ஒரு தலைவன் என்பவன் யார்?

அவன் குண நலன்கள் யாது?

அவன் எப்படி உருவாகிறான்?

 

தொடர்ந்து எம்மெண்ண அலைகளோடு இணைந்திருங்கள்!

 

தேடுவோம்! நம் தலைவரைக் காண்போம்!

 

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்!

About The Author

Related posts

2 Comments

  1. Priya V

    Well Said! Change is not possible if it not comes from the heart of the people none other than us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *