Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

Mega Pulse Scam – மெகா பருப்பு ஊழல்

Mega Pulse Scam

Story Highlights

  • Thani Oruvan Scams Proven

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

 

தனி ஒருவன் பட பாணியில் Mega Pulse Scam – மெகா பருப்பு ஊழல்

Cheating is not a Crime! But?

 

 

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்; அநீதிகள் அரங்கேறுவதை தவிர்த்து! ஒரு காலத்தில் ஜனாதிபதி நாடு நாடாய் சுற்றுகிறார் என்ற கதைகள் போய் இன்று பிரதமரே அவ்வேலைகளில் ஈடுபடுகிறார். அய்யா சாமி! நம்ம அண்ட்ராயர் ஓட்டையா இருக்கு அதைத் தையுங்கன்னா,அடுத்தவனுக்கு ஹால்ஃப் பேண்ட் தைக்கிறாராம்!நீங்க ஒண்ணும் உலகம் முழுக்க சென்று எங்க நாடு அப்படி வரப்போகுது இப்படி வரப்போகுதுன்னு தம்பட்டம் அடித்து கைதட்டு வாங்க வேண்டாம். வாங்க! நம்ம எதைச்சொல்லி ஆட்சியில் அமர்ந்தோமோ அந்த வேலையப்பருங்க!

அமைச்சரகம் மூலமாக இந்த வருடம் எதிர்பார்த்த மழை கிடைக்காதுன்னு ஒரு பேட்டி. அப்புறம் வணிகர்கள் இருப்பு வைக்கும் அளவை நீக்கியது. சந்தடி சாக்கில் (அதாவது பணம் படைத்த முதலைகள் (குறிப்பாக இரண்டே இரண்டு கொள்ளையர்கள்) பெரும்பான்மையான தானியங்களை கைப்பற்றியது) சந்தையில் பற்றாக்குறையை உண்டு பண்ணி கொள்ளை விலை வைத்து விற்று கொள்ளையடித்தது. அதன் பிறகு மறுபடியும் இருப்பு அளவீடு கொண்டு வந்தது; கண் துடைப்பிற்காக சோதனைகள், பறிமுதல்கள் நாடகங்கள் அரங்கேற்றியது; பருப்பு இறக்குமதி அனுமதித்ததோடு அதற்கும் அம்முதலைகளையே அமர்த்தியது இவையாவும் நிச்சயம் விவசாயிகளின் சங்கம் வழக்கு தொடர்ந்திராவிடில் எமக்கும் எம்மக்களுக்கும் தெரியாமலே போயிருக்கும் – ரூ. 40க்கு கொள்முதல் செய்து ரூ. 200க்கு மேல் கொள்ளையடிக்கும் மெகா பருப்பு ஊழல் பற்றி!!

ஏமாற்றுவது கூட குற்றம் கிடையாது!

 

ஆனால்

 

ஏமாறுவது குற்றமே!

 

என்று தான் மாறும் இந்நிலை! இந்தியரின் இழிநிலை!!

 

Mega Pulse Scam – மெகா பருப்பு ஊழல் மீண்டும் ஒருமுறை நம்மை சாம்பாரால் அடித்துச் சொல்கிறது; தான் உயிர் வாழ இன்னோர் உயிரைக் கொன்று உண்டு வாழும் மிருகங்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லையென்று!

குட்டையில் ஊறிய மட்டையில் நல்ல மட்டை எதுவுமில்லை என்பது மட்டுமல்ல, இங்கே மட்டைகளே குப்பைகளாகவே உள்ளதும் இழிநிலையே!!

 

நாம் இங்கு மட்டைகள் என்று கூறியது நம் அரசியல் தலைவர்களையும் நம்மையும் தான்!

 

உண்மையைச் சொன்னால்தான் கோபம் வரும்! கோபம் வந்ததென்றால் இவையாவும் உண்மையே!!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *