Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

அம்மாவின் ஆணைக்கிணங்க

Sorrow - வேதனை

Story Highlights

  • இது எந்தக் கட்சிக்கும் வக்காலத்துப் பதிவல்ல
  • ஆனால்
  • நிச்சயம் அரசியல் பதிவுதான்!

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது பொதுவான மறுப்புதான் என்றாலும், இப்பதிவுக்கென்று சிறப்பு சேர்ப்பு ஒன்றையும் அறிவிக்கிறோம்! அது யாதெனில், இப்பதிவைப்பற்றியோ இப்பதிவின் பொருட்டோ ஏற்படும் விளைவுகள் யாவும் இப்பதிவின் உண்மைத்தன்மையை சான்றளிப்பதாகவே ஆகும். எனவே அரசியல் கட்சிகளைச் சார்ந்த நண்பர்கள் இக்கவிதையைப் படித்து உங்கள் மனதை வருத்திக்கொள்ள வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எந்த விதமான அவதூறு வழக்குகளுக்கும் நாம் தயாரில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

 

அம்மாவின் ஆணைக்கிணங்க

 

எங்கள் அம்மாவின் ஆணைக்கிணங்க

அங்கிங்கெனாதபடி சென்னை மட்டுமின்றி

தங்கக் கடலூரிலும் அணைத்துச் சென்ற

சிங்கமழைத் தாயிற்கு நன்றி!

 

எங்கள் அம்மாவின் ஆணைக்கிணங்க

மழைப்பொழிவு நிற்கும் வரை

எங்கேயும் காண முடியாதபடி

பாலையில் நீராய்ப்போன சேவகருக்கும் நன்றி!

 

எங்கள் அம்மாவின் ஆணைக்கிணங்க

வந்தமழை போதாதென்று

பொது அறிவும் பணி உணர்வும் அற்று

மடை திறந்த ஊழியர்க்கும் நன்றி!

(அம்மா மட்டுமா காரணம்? அய்யா, அண்ணன்கள், மாமன்கள், விடி வெள்ளிகள்?)

 

பேய் மழை , மா மழை! வந்து சென்னை

முடியட்டும்! விடியட்டும் !!

போய் பேழை , பொய் பேழை தந்து மக்களை

முடித்திடலாமென்றிருந்த அய்யாவிற்கு நன்றி!!

 

வாய்ப்புக்காய் தோப்புக்கும் ஆலயத்திற்கும்

வரிசைகட்டி மாறியலைந்த 

பசுந்தோல் போர்த்திய நரிகள்

மாரிப்பொழுதில் நாறிப்போனதிற்கு நன்றி!!

 

நாட்டின் சுதந்திரத்தைக் கூட

சதி செய்து பழித்தே – மேடைகளில்

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த

நீதிமான்கள் யாவருக்கும் நன்றி!!

 

சாதி மத வெறி பிடித்து

இல்லையில்லை 

ஆட்சி, அதிகார போதை தொட்டு

சாதி, மத, இன, நாட்டின் இன்ன பிற

மன, மானப்பிரச்சினை  கைப்பிடித்து

தமிழ் வாழும் நிலை தாழ்த்தி

தான் வாழும் வழியொன்றே போற்றி

கேடு நிலை செய்தனரே மூடர்!

 

சேதியன்று, வீண் கனவன்று 

ஆட்சி அதிகார பேதை விட்டு

அம்மூடர் மூச்சாக்கிய தடைதகர்த்து

சக மனிதன் சங்கடத்தில்

அகம் புரிந்து செயல்புரிந்து

உயர் மாண்புநெறி காத்தனரே மக்கள் !!

 

பழுதடைந்த அரச இயந்திரம்

பழுதின் முழுப்பழியும் 

பகர்வதிற்கில்லை இவ்வரசின் மேல்!

பழி நிச்சயமுண்டு!

ஆனால் அது முதல் பழியில்லை!

 

மழை கண்டு, மக்கள் நிலை கண்டு

பகைவரென்று! பழி சொன்ன –

ஆட்சி புரிந்தவரெல்லாம்

நிலை காட்டிய, மக்களெல்லாங்கூட

சூழ்ந்த நிலைகருதி உதவிக் கரம் நீட்ட

உதவவும் கையாலாகாமல் உதவிகளை

உதாசீனப்படுத்தும், அதற்கும்புற

நானூற்றை குறிகாட்டும்பழி உண்டு.

 

அரசு செய்யும் என்றுமக்கள்

நம்பவில்லை – அரசா செய்யும் என்றும்

வெம்பவில்லை!

பிறந்ததோர்! 

இல்லையில்லை

உணர்ந்தோம் நாம்! நாமேதான் 

நமக்கென்று!

இதுகண்டு –  ‘நமக்கு நாமமே’ 

புன்னகைத்தாலும் அதுவும் நிலையில்லை

ஏனெனில் பெரும்பழி அவர்கட்கே – 

அவர்தம் சாதனைகளே மூலம்

 

யார் வந்தாலும் வராவிட்டாலும்

வாழ்வதும் வீழ்வதும் நாமே!

காப்போம் நம்மை நாமே!

 

மதங்கள், சாதிகள், இனங்கள்

மட்டும் காணாமல் போகவில்லை

அதைப் பிடித்த சனிகளும் மட்டுமல்ல

சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளுங்கூட

சட்டென்று தொலைந்தன!

 

பாரதம் ஒரு மறுமலர்ச்சியை

தமிழகத்தின் தயையுணர்வில்

தமிழர்களின் மனித நேயத்தில்

கண்கூடாய்க் கண்டது!

 

சாலை இல்லை! சுகம் இல்லை!

பொருளில்லை! செயலில்லை!

இப்படி பல இல்லைகளுக்கும் 

தொல்லைதந்து தொலைத்தனர் 

ஈரம்மிகு மக்கள்!

 

இடைவிடா மழை!

இருள்நீங்கா வானம்

இடமில்லாமல் தண்ணீர்!

 

அதிசயம் பாரீர்!

ஈரம், மழை, நீர் 

இவற்றிலேயே இன்னல்பட்டாலும்

எம்மனித தெய்வங்களின் – மக்களின்

ஈரம் அவர்கட்கு வெயிலானது!

 

வாழ்க்கை ஒரு பாடம் – இல்லை

அது ஒரு அனுபவம்!

ஆதி தமிழன் – மனித இனம்

உலகின் வேறெங்கும் தவழக்கூட 

தொடங்காத காலத்தில்

அரசமைத்து, நல்விதி செய்து

பாருக்கே மூத்தவராய் வாழ்ந்தநாம்

கூத்திற்கும் கூத்தாடிகளுக்கும் 

மட்டுமே கொடி பிடித்தால் 

நாடும் நகரமும் கேடு சூழும் !

கூத்தென்றால் கேவலமா?

கூத்தாடிகள் கேவலமா?

நிச்சயம் இல்லையெனினும்

அவர்கள் மற்றவரைக் காட்டிலும்

உயர்ந்தவருமில்லை!

 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த

முன்னோர் – உழைக்கும்

சிங்கங்கள் மனதை வளர்க்க

படைத்ததே கலை

எனில்

கலையும் ஆசிரியருக்கிணையே!

 

பல்வேறு பிரிவுகளில் உழன்றாலும்

மனிதமே புனிதமானதென்று

சீருணர்ந்த செம்மை!

இடர் தீர்ந்த பிறகும் 

சுடர் விட்டால்…!

 

என்னவாகும்?

கீழ்காணும் நகைச்சுவை கலாட்டாக்கள் உங்களுக்கு கிடைக்காமலே போய்விடும்!

 

 

“அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பொழிந்தது”

 

 

“மக்கள் முதல்வர்”

“நமக்கு நாமமே”

“விடியட்டும்! முடியட்டும்”

“தமிழகத்தின் விடிவெள்ளி”

“உச்ச நட்சத்திரம்”

“தலைவா, தளபதி”

“xxxxxxxxxxxx – முடியல”… தொடரும்!

பின் குறிப்பு: மழை சற்று குறைந்து விட்டதாலும் எப்போது வேண்டுமானாலும் நிவாரணம் செய்யாமல் ஒட்டு கிடைக்காமலே போய்விடலாம் என்ற பயத்தில் உதவி செய்பவர்களின் உதவிகளைக் கூட திருடும், பறிக்கும் கேவலங்கள் நிகழ்ந்துள்ளது. இப்போது ஒளிந்திருந்த கயமைகளும் படை எடுக்க ஆரம்பித்து விட்டன. இயற்கையின் சீற்றத்தின் போது இணைந்திருந்த மனிதம் இழிவான ஈனர்களிடம் தோற்றுவிடுமா? அல்லது வெல்லுமா?

 

 

பொறுத்திருந்து பார்ப்போம்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *