Rajini – ரஜினி எனும் பிம்பம்

ரஜினி
ரஜினி

Story Highlights

  • நம் ஆழ்மனதின் நிஜமுகம்

Rajini – ரஜினி எனும் பிம்பம்

இந்தப் பதிவுக்கு பொறுப்பு துறப்பு அறிவிப்பெல்லாம் தேவையே இல்லை! அதற்குப்பதிலாக கூடுதல் அறிவிப்பு வேண்டுமானால் ஒன்று பதியலாம் என நினைக்கிறோம்!

அறிவிப்பு

இது அறிவிப்பு தானே அதனால் கடைசியில் பார்ப்போம்!

ரஜினி

யார் இந்த ரஜினி?

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் ரஜினியைப் பிடித்த அனைவருக்கும் அவர் ஒரு நடிகர். அதற்கு மேல் அப்படி இப்படி என்று சொல்வது, சொல்லிக்கொள்வது, கொண்டாடுவது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உரிமை மட்டுமல்ல விருப்பமுங்கூட!

சரி அதற்கென்ன?

அட! நானும் அதையேதான் கேட்கிறேன்! யாரை? அது இப்பதிவைப் படிக்க படிக்க தன்னால் தெரிந்து விடும்! இதற்கு மேல் இந்தப் பதிவையும், பதிவின் நோக்கத்தையும், போக்கையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் இன்னும் கொஞ்சம் விபரமாக பார்க்க வேண்டும்!

யார் தான் இந்த ரஜினி?

என்னது? மறுபடியும் முதல்ல இருந்தா? அட! இன்னுமா புரியல? இந்தக் கேள்வியை திரும்ப திரும்ப படிச்சுப்பாருங்க! ஒரு ஆர்வம், இனம்புரியாத மகிழ்ச்சி வருதா? இல்லையா? அந்த உணர்வு வராதவங்களை அல்லது வந்தும் ஒத்துக்கொள்ளும் தைரியம் இல்லாதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை! இந்த ரஜினி வேற யாரும் இல்லை! நான் தான் அந்த ரஜினி! நாம் தான் அந்த ரஜினி! ரஜினி என்னும் பிம்பம்!

ரஜினி என்னும் பிம்பம் – மாயை

ஆம்! பிறப்பிலும் வாழ்விலும் நாம் அனைவரும் நல்லவரே! தேவையின் பொருட்டு அறம் தவறும் போது, தவற நினைக்கும்போது நம்மைச் சேர்ந்தவருக்கு இடராய் மாறும் நாம் சமூகத்தின் பதராயும் போய்விடுகிறோம்! இதுவும் ஆன்மீகக் கூற்றே! ஆம் நம் மனதில் அடக்கி வைத்த கோபம், நேர்மை, சாதனை வேட்கை இவையனைத்தும் நம் முன்னே நாமாக எண்ணித் தீர்த்துக்கொள்ளும் வடிகால் ரஜினி என்னும் மாயை

வடிகால்

ஏழை, அறிவாளி, சாமான்யன் இவர்களெல்லாம் கனவில் காணும் விசயங்களின் நிஜ திரை பிம்பம் ரஜினி என்னும் வடிகால்!

அது ஏன் ரஜினி?

நமக்கு பிடிக்கலன்னா ஆயிரம் காரணம் சொல்லலாம்! ஆனால் பிடிக்கறதுக்கு ஒரு காரணமும் தேவையில்லை!

சமூக வலைதளம்

சமுதாயம் என்பது நாமும் நாம் வாழும் சூழ்நிலைகளும் சுற்றத்தாரும் சேர்ந்ததே! ஆக எவனொருவன் அந்தச் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறானோ அவனே அறிவான் அவனுக்கு எது தேவையென்று! வலைகளில் இணைந்து நிழல் சமுதாயம் இயங்க ஆரம்பித்து பல நன்மைகள் விளைந்தன. இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!

நச்சு வேர்கள்

இனம், மொழி, மதம், விருப்பு, வெறுப்பு, பொறாமை, துரோகம் கொண்டு வசை பாடும் பொய் சமூக ஆர்வலர்கள், இன மானப் போராளிகள் பலரை இப்போது சமூக வலைதளங்களில் பெரும்பான்மையாகக் காண முடிகிறது. நாம் எவ்வளவு வேகமாக நம்மை இழந்து வருகிறோம் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்:

“ஒரு நண்பர், திறமைசாலி, நன்கு சாதித்திருக்கிறார்! அவரின் ஒளி பிம்பத்தை பதிவு செய்யலாம் என்றால் வீட்டுக்கு சென்று நன்கு அலங்கரித்து விட்டு “என்னாச்சு?” செயலியில் அனுப்புகிறாராம்! “

எங்கு எந்த போன் கம்பனியில் எப்போது இலவசமா கிடைக்கும்னு பார்த்து முகநூல்லயும் டுவீட்டரிலும் எவனோ ஒருவன் ஷேர் செய்தத அப்படியே ஸ்டேடஸ் போடற புத்திசாலிகளெல்லாம் சமுதாயத்தையும் வாழ்க்கை நெறிமுறையும் பேசுவாங்களாம்!

கொசுத்தொல்லை

கபாலி – ரஜினியின் அடுத்த படம்! இயக்குநர் கூற்றுப்படி இது வழக்கமான ரஜினி படமாக இருக்காதுங்கிறார்! அப்படியும் பார்ப்போம்ன்னு இருக்கிறோம்! ஏன்? ரஜினியிடமிருந்து ஏமாற்றங்கள் குறைவு, மனதிற்கு! ரஞ்சித்திடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகம், “மெட்ராஸ்”க்குப்பிறகு! அதனால் இந்தப்படம் பார்ப்பதற்குமுன்பே காதில் குடையும் கொசுக்களுக்கு மருந்து இதோ!

கபாலி டிக்கெட் விலையில அரை மாசம் அரிசி வாங்கலாம்!

சரி! வாங்கிக்க! அதை ஏன் எங்க கிட்ட சொல்ற?

நீதிபதி ஐயா நாங்களும் விருப்பப்பட்டுதான் கொலை, கொள்ளை எல்லாம் பண்றோம்! நீதிமன்றம் எதற்கு தண்டனை தருது?

தறு.. ! மங்கா.! நீங்க பண்றது தெரியும்! 40 ரூபாய்க்கு கொள்முதல் பண்ண பருப்பு விலை 160 ரூபாய்க்கு விக்கிது – போய்க் கேளு! 25 ரூபாய்க்கு விக்க வேண்டிய பெட்ரோல் 60 ரூபாய்க்கு விக்கிது கேளு! குற்றமும் தொழிலும் ஒண்ணா மூ..?

காஞ்சிபுரம் பள்ளிக்கு தீர்ப்பு வர 10 வருஷம்! கபாலிக்கு உடனே தீர்ப்பு? நீதித்துறை கூத்தாடித்துறை ஆகிவிட்டது!

‘கபாலி’ ங்கிறது படம், திட்டமிட்டு எடுக்கப்பட்டது. அது ஒரு தொழில்! அதைச் சான்றிடுவது அரசாங்கத்தின் ஒரு துறை! ஆனால் பள்ளியில் ஏற்பட்டது விபத்து! அப்பள்ளியை அனுமதித்தது யார்? அதுவும் அரசாங்கத்தின் துறை! இதில் நீதித்துறையைச் சாடும் போக்கு, பிற்போக்கு!

ரசிகரெல்லாம் தியேட்டர்ல சத்தம்போடாதிங்க! ஆடியோ கிளியரா இல்லை!

பாரு! 10 நாள் கழிச்சு TAMILROCKERS வலைதளத்திலேயே ஒரிஜினல் பிரிண்ட் கிடைச்சாலும் கிடைக்கும் பாரு! அதற்கு என்ன? அவங்க தான் ஒரு வாரத்திலேயே லாபத்தை எடுத்துருவாங்களே! என்னது? எம்பணத்தைதான் கொள்ளை அடிக்கறாங்களா? அட! ஆட்சிக்கு வந்துட்டு கோடி கோடியாக அடிக்கிறாங்க! இலவசம்கிற பேர்ல நீயும் என்னை மாதிரி எவனெவனோ உழைச்சு கட்டுன வரில பிச்சைஎடுத்து திங்கிற! எனக்கு என்னைக் காமிச்சவனுக்கு நான் கொடுக்கிறேன்! 

சோத்துக்கு வழியில்லாம எத்தனை குழந்தைங்க இருக்காங்க? கட் அவுட்டுக்கு பாலாபிசேகமா?

எனக்கும் வருத்தம் தான்! அதுக்காகவெல்லாம் உங்களை யோக்கியன்னு சொல்ல மாட்டேன் உங்க வீதியிலிருந்து 4 அனாதைகளை தத்தெடுத்த தருமப்பிரபுவே!

சென்னை மழையை ஞாபகம் வச்சுக்கோங்க! கபாலிய தோற்கடிப்போம்!

கவுன்சிலரக்கூட கேள்வி கேட்க முடியாத கூ.ரை! இங்க ஏன் கூவுற?

இறுதியாக! நச்சுக்களைப் பத்தி பேசிட்டு நம்ம விசயத்தையும் பார்ப்போம்! நாம நம்மை வர்ற 22ம் தேதி திரையில பார்ப்போம்

 

அறிவிப்பு

பொறாமைக்காரர்களும், பொய் போராளிகளும், பொய் இன மான காவலர்களும் ஓடி ஒளிந்து அழ வேண்டாம். உங்களுக்காக இப்பதிவின் கமெண்ட் திறந்தே இருக்கும்! உங்களின் பதில்களை நேர்மையாக பதிவிடும் தைரியம் எமக்குண்டு! அதே சமயம் சமுதாயப் பண்பின் பொருட்டு அவற்றில் வரும் தகாத வார்த்தைகளை கோடிடும் குணமும் உண்டு! உங்களை, உங்களின் நிஜ முகத்தோடு சந்திப்போம்!

About The Author

Related posts