Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஊரு ரெண்டு பட்டால்…!

ஜல்லிக்கட்டு

Story Highlights

  • ஒற்றுமையே உயர்வு!

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

ஊரு ரெண்டு பட்டால்…!

கூத்தாடிக்கு கொண்டாட்டம்!

 

அன்பு நண்பர்களே! 

உங்கள் போராட்டம் இந்த பாருக்கே ஒரு முன்மாதிரி! பெருமிதம் கொள்ளுங்கள்! இங்கே ஆரம்பத்தில் நடிகராய், அரசியல்வாதியாய், இன்னும் பல்வேறு அடையாளங்களாய் வந்த அற்பர்களை விரட்டிவிட்டீர்கள்!; விலக்கி விட்டீர்கள்! உங்கள் பகுதியில் நிழல்தந்த ஒரு கிளையை; வேராய் நம்பி அனுமதித்தீர்கள்; அதன் வேர் வேறாய் இருந்ததை உணர மறந்தீர்கள்!

 

எல்லாம் நன்மைக்கே! இன்றாவது உணர்ந்தீர்களே! இனியும் தோள்கொடுக்கும் எந்த நட்சத்திரமும் வேண்டாம்; தூக்கிவிட ஏணியும் வேண்டாம்! தொடரட்டும் உமது அமைதிப்போர்!

 

மறந்து போன காவல்துறை நண்பர்களுக்கு: நீங்கள் தேச விரோதிகளென்றும், கலந்து விட்ட அவர்களைத்தான் கலைக்கிறோமென்று செய்யும் துரோகம் உங்கள் குழந்தைகளுக்கானது! வரலாற்றில் நீங்கள் தூற்றப்படுவீர்கள்! உரிமைகளை கேட்பது தேச விரோதமன்று! தலைவர்களைத் தூற்றுகிறார்கள் என்றால் மரியாதைக்குறைவாகவும், தனிமனித தாக்குதல்களாயும் இருக்கக் கூடாதுதான். ஆனால் அவை அரசாங்கத்திற்கும் அவற்றின் கொள்கைகளுக்கு எதிராகவும் இருக்கக் கூடாது என்பதில்லை!

மனம் மறைத்துப் பதியும் ஊடக நண்பர்களுக்கு: நீங்கள் உண்மையை மறைத்து, ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருவதாய் எண்ணிக்கொண்டு வியாபார முதலைகளுக்குத் துணை போகாதீர்!; தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு!

மனம் குழம்பியிருக்கும் நண்பர்களுக்கு: உங்கள் மனசாட்சிப்படி போராடுங்கள்! மண்ணின் மாண்பும், தேசத்தின் நலனும் இணைந்தே நாம்! மாற்றான் எவனுக்கும் எம் இனம், மொழி, கலை, நாடு இவற்றை விட்டுத்தர மாட்டோம் என்று வீறு கொள்ளுங்கள்!

போராடும் குழந்தைகளே! இந்தப் பார் போற்றும் உங்கள் முயற்சி தொடரட்டும்! வெற்றி உமதாகட்டும்! உங்களால் எங்கள் தலைமுறையின் சாபம் தீர்கிறது!

 

            தமிழனென்று சொல்லடா!                                                   தலை நிமிர்ந்து நில்லடா!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *