Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

GST – Goods and Services Tax Untold Facts

Story Highlights

  • புத்திசாலியான அரசாங்கம் எனில் மக்கள் ஏமாளி என்று பொருளா?

GST – Goods and Services Tax Untold Facts

சரக்கு மற்றும் சேவை வரி

மறைக்கப்படும் உண்மைகள்! மறுக்கப்படும் நீதிகள்!

பொறுப்பு துறப்பு: இது அரசியல் பதிவன்று! அதே சமயம் எதிர்க்கட்சிகள் இக்கருத்தில் ஒட்டிக்கொள்ள அனுமதியும் இல்லை! ஏனென்றால் அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை! இது சமுதாய விழிப்புணர்வு பதிவு! மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

 

சுதந்திர பாரதத்தின் மிகப்பெரும் சீர்திருத்தம் என்று சொல்லப்படும் ஒற்றைச்சாளர வரி விதிப்பு என்பது மிகப்பெரும் மோசடி!

 

GST – GOODS AND SERVICES TAX

சாதகங்கள் – Advantages

  • Pan India Tax System ranging from 0% to 28%
  • Eliminates all other Direct Tax Schemes like VAT, CST, ST, Customs and Excise Duty
  • Eliminates all other Special Taxes levied by States which varies from State to State
  • Regularisation of Tax schedules for all Goods and Services
  • Taxing for All Goods Sale and Service Rendered
  • Capital Cost reduction for all Manufacturing resulting in Lowering of Prices
  • Credit Adjustment and Inclusion of All Un billed transactions using Reverse Credit Mechanism

 

Disadvantages – பாதகங்கள்

  • The MRP of the Goods and Cost of Service rendered will be higher than the normal
  • Only Businessmen will be favoured, frankly saying the Capitalists will be benefited
  • No Assurance or Limitation in Working Capital and Profit Ratio which will result in hike of prices
  • Consumers have no choice other than Local and House-made Goods and will result in lack of Services and Goods which are only available by Import

 

சுருக்கமாக கூறவேண்டுமாயின், GST – சரக்கு மற்றும் சேவை வரி என்பது முதலில் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானமே! ஏனெனில் வசூலிக்கப்படும் வரியில் சரி பாதி மாநிலத்திற்கும், மீதி மத்திய அரசுக்கும் செல்கிறது. அதனால் அரசாங்கத்திற்கு இழப்பில்லை. வியாபாரிகளுக்கும் வரிச்சுமை இல்லை. ஏனெனில், கொள்முதல் வரி உள்ளீடும் உண்டு. இரண்டு மூன்று வியாபாரிகளுக்கு கை மாறி விற்பனை செய்தாலும், வணிகர்களுக்கு இழப்பு இல்லை. அற்புதமான திட்டமைய்யா இது. பார்த்து வாயைக் கொஞ்சம் திறக்காம பேசவும். அத்தனை வரியையும் கட்டப்போறது, செவ்வாய் கிரகத்துக்கு போயி சம்பாரிச்சு கொண்டு வரப்போற ராக்கெட் இல்லை நண்பரே! சாட்சாத் நாம் தான்; மக்கள் தான்! மக்கள் என்றால் வியாபாரிகள் வேறு என்று பொருளன்று. அவர்களும் அவரவர் தொழில் தவிர்த்த பொருள்களைக் கொள்முதல் செய்யும் போது இதே சுமையை சுமக்கின்றனர்! 

 

GST யை தவிர்க்கும் வழிகள்

முடியுமா? நடக்குமா? ‘கபாலி’ பாடல் வரி தான் ஞாபகம் வருகிறது. முயன்றால் தவிர்க்கலாம்! ஆனால் மேல்நாட்டு மோகம் கொண்டு திரியும் எமது முன்னேறிய சமூகம் எவ்வளவு தூரம் முயல்வர். அவர்களது முயற்சிகளை வியாபார முதலைகள் எப்படி அனுமதிப்பர் என்பதும் கேள்விக்குறி!

  • வாங்கும் பொருட்களை GST பதிவு செய்யாத நபர்களிடமிருந்து வாங்க வேண்டும்!
  • ஆடம்பரப்பொருட்களை தவிர்க்க வேண்டும்
  • அறிவியல் மற்றும் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
  • குறிப்பாக தொலைபேசி, கைபேசி, இணைய சேவைகள் தவிக்கப்பட வேண்டும்
  • விவசாயம் செய்ய வேண்டும்
  • இல்லையென்றால் வக்கீல்களாக தொழில் செய்ய முயற்சிக்க வேண்டும்
  • அதுவும் இல்லையென்றால் பெட்ரோல் வணிகம் செய்ய வேண்டும்
  • அதுவும் இல்லையென்றால் போக்குவரத்து தொழிலில் ஈடுபடவேண்டும்
  • சினிமா போன்ற பொழுதுபோக்குகளைத் தவிர்க்க வேண்டும்
  • நேரடியாக தயாரிப்பாளரிடமிருந்து கொள்முதல் செய்தால் ஒரு முறை வரி செலுத்தினால் போதும்
  • எவ்வளவு இடை நிலை வியாபாரிகள் மாறுகின்றனரோ அவ்வளவு முறை வரியை சேர்த்துக் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்

 

அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில் அந்நியனுக்கு கப்பம் செலுத்தினோம்!

விடுதலைக்குப்பின் நமக்கே நாம் வரி செலுத்துகிறோம்!

 

சுய கட்டுப்பாடும், ஒழுக்கமும் இல்லாத மக்கள் கூட்டத்திலிருந்து உருவாகிய அரசாங்கம் மேன்மையானதாக இருக்கவே முடியாது

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *