April 19, 2018

ஹேவிளம்பி மார்கழி ‘௨௬’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௬’ ம் நாள் (26) புதன்கிழமை / 1௦.01.2018

உலகில், மனிதர்கள், மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டிருப்பது முதலில் நமக்கிருக்கும் மனதினால் தாம்! நாம் பொதுவாக இயைந்து வாழ்கையில் நமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டியதும் அதைத்தான்! ஒப்புரவில், சிறிது ஏற்ற, இறக்கம் இருக்கையில் அதைத் தன்மானம் கொண்டு, கடந்து வரப் பழகுவதும், பழக்குவதும் நமது உரிமையும் கடமையும் ஆகும்! வெற்றி – மனிதனை முன்னிலைப்படுத்தும்! தோல்வி – மனிதனை முழுமைப்படுத்தும்! விதிகளைச் செய்த நாமே, வசதியாய் சதிகளைப் போற்றக்கூடாது! 

 

வெற்றி மட்டுமே ஒருவனது திறமையைப் பறைசாட்டுமென்றால் இவ்வுலகில் 99.9 சதவிகிதம் திறமையற்றவர்களே! தோல்வியென்றும் இழிவில்லை! அது வெற்றியின் வேட்கையைத் தூண்டும்

சுடர்!

அணையாமல் காத்து!, அணைக்காமல் பார்த்து? கடந்து செல்வோம்!

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி மார்கழி ‘௨௬’

About The Author

Related posts