தாமிரப்பார்வை

Prayer

Story Highlights

  • தன்மானமிழந்ததோரினத்தின் தோலுரித்த திங்களிது!

தாமிரப்பார்வை

அடிமைப்பட்ட தேசம்

அடக்குமுறைகட்கு 

அடங்காமல் பொங்கிய

அன்றைக்கும்

விலைபோன மாந்தர்தம்

உரிமை விற்ற கேவலம்

உண்மை உணரா

உமியாய்

நெருப்பிற்கும் நெருக்குதல்செய்து

உயிர் இழந்த அவலம்

இன்றைக்கும்

இம்மண்ணின் மாண்பின்

இழிநிலையை பதியம் செய்கிறது

இதயத்தில்!

 

 

கலவரம் என்ற போர்வையில்

கயமை புரிந்த மக்கள்

மக்கள் என்ற போர்வையில்

மாசு செய்த மாக்கள்

 

காவல் துறை பாவம் – காக்க 

அழிக்கும் பணிசெய்திட -அமைந்த

அரசின், ஆட்சியின் குறைதிறன்!

 

மக்களும் பாவம் தான் – எதிர்

கட்சிகள் பிணம் திண்ணும் – கழுகுகளாய்

மண்ணில் வாக்குப்பொறுக்கும் மூடத்தனம்!

 

தாமிரக்காற்று இன்று

தன்மானமிழந்ததோரினத்தின்

தோலுரித்த திங்களிது!

 

மனிதம் தொலைந்த; 

ஓர் இனத்தின் மாண்பழித்த

தாமிரப்பார்வை!

About The Author

Related posts