காலா கரிகாலன் – மாத்தி யோசி!

காலா

Story Highlights

  • அரண்டவனுக்கு இருண்டதெல்லாம்....

காலா கரிகாலன் – மாத்தி யோசி!

காலா கரிகாலன் – இது திரைவிமர்சனம் மட்டுமன்று! நம் அகக்கண் திறக்கும் சாவியும் கூட! இப்படம் ரஜினி படமல்ல! ரஞ்சித் படமென்றால் ரஞ்சித்தையும், ரசிகர்கள் சீராய்வு செய்ய வேண்டிய கட்டம் இது.

 

காலா – திரை விமர்சனம்

ரஜினி

எங்கே? எங்கே? என்று தேடினாலும் கிடைக்கவில்லை. மனிதர்களின் மனநிலை, வயதோடு குணமிழந்து, பற்றிழந்து போகும் என்பது மீண்டும் ஒரு திரை நட்சத்திரம் மூலம் நிரூபணமாகியுள்ளது. 

இந்தப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது இப்படத்தின் கருத்தில் ஒவ்வாமல் தான் நிகழ்கால சம்பவங்களின் போது மறுப்புகள் தெரிவித்திருக்கலாம்.

ரஜினி மக்களின் இரசனையை மனதில் வைத்துதான் இப்படத்தினை தேர்வு செய்திருந்தால், மக்களை தவறாக எடை போட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. வாக்கு வங்கிக்காக என்றால் நிச்சயம் இதுவும் துரோகம்தான்.

 

இயக்கம் மற்றும் மற்ற யாவும்

இப்படம் வேறு யாராவது நடிகர் நடித்திருந்தால், மிகவும் மோசமானதொரு தோல்வியையே தழுவி இருக்கும். இப்படம் மிகவும் நேர்த்தியாக, தெளிவாக திட்டமிடப்பட்டு, ஒரு நட்சத்திரத்தின் “XXX” [தணிக்கை செய்யப்பட்டது] யில் ஒளிந்துகொண்டு வலம் வரும் விசக்கிருமி மற்றும் சமுதாய விரோதம்.

வண்ணங்களின் ஜாலத்தில், வாக்கியங்களின் பொதுப்பிரயோகத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் சமூக விரோதம். பார்வைகளில் தவறென்ற போர்வையில், தைரியமாக தவறைச் செய்த துரோகம். எந்தப் படைப்பும் சிரமமின்றி, கடின உழைப்பின்றி, சரியான திட்டமிடலின்றி முழுமை பெறாது.

அதன்படி, தத்தம் பணிகளைச் சிறப்பாய்ச் செய்திருந்தாலும் பயன் தீமை செய்வதெனில், அப்பணியாவும் மோசமே!

 

காலா! – எண்ணத்தில் ஊனம் மிகு, தாழ்வு மனப்பான்மை கொண்ட “xx”யின் [தணிக்கை செய்யப்பட்டது] கைவண்ணத்தில் தீட்டப்பட்ட நீXXபடம் [தணிக்கை செய்யப்பட்டது] என்றால் அதுவும் குறையே. உண்மையைக் காண்பிக்கிறோம் என்றுவிட்டு வண்ணத்தில் உண்மையை ஒளித்துவிட்டு, ஊன் வளர்த்த தாயின் “XXX”ழித்த [தணிக்கை செய்யப்பட்டது] செயல் கொடியது. நிலம் பொதுவென்ற போர்வையில், உழைப்பைப் போற்றாத தரம் தாழ்ந்த பார்வை தீயது. போராட்டங்களைக் கொச்சைப்படுத்திய கோர்வை கொடியது.

 

நம்மை நம்பும் நல்லோரைப் பழித்து, பலன் பார்த்து உறவாடும் தீயோரை அணைத்து தேசம் காக்க யாராலும் முடியாது

About The Author

Related posts