போ போ போராட்டம்

போராட்டம்
போராட்டம்

Story Highlights

  • தீதும் நன்றும் பிறர் தர வாரா

போ போ போராட்டம்

போராட்டம் இல்லையேல் 

வாழ்க்கையே இல்லை!

போதும் ஆட்டம் போட்ட 

பொய்ப் போராளிகளே !

 

விலங்கிலிருந்து வேறுபட்டு 

மனிதராய் மண்ணில் 

வீறுபோட்டு நடப்பது 

நமக்கிருக்கும் மனத்தினால் !

 

நற்வினையின் பயன்

நன்மையே 

தீவினையின் பயனாவது 

அழிவே !

 

செயல் புரிந்தது 

வீரர்களா? வீணர்களா?

செத்து மடிந்த மாந்தர் 

சேர்வது யார் கணக்கில் ?

 

தீமையின் அணி சேர் 

நல்லோர் அத்தீமையின் 

தீயிற்கே தாங்கவொண்ணா 

தீனியாய் தீர்கின்றார் !

 

மண்ணின் மழைப் போர்வை 

மாந்தர்களின் மாண்பின் 

மாறாய்ச் சான்றாய் 

மையல் கொள்ளும் !

 

மாண்பின் அணியும் 

அணியின் நெறியும் 

நெறியின் தலையும் 

வாலுக்குத் தெரியா!

 

தலையின் மனம் 

சத்தியம் புகல்கையில் 

வாலுக்குத் தெரிவதெல்லாம் 

கீழ்சேர் அகழே!

 

கோருவதெல்லாம் உரிமையல்ல 

சேருவதெல்லாம் கூட்டமல்ல 

பேசுவதெல்லாம் முழக்கமல்ல 

வீழ்வதெல்லாம் வீரமுமல்ல !

 

காக்கும் பணிசேர் 

மாந்தர்களை அரக்கராய்ச்செய் 

கூட்டமும் கூலிக்காரர்களும் 

மாக்களே!

 

அரசாட்சியை பொதுவுடைமை 

அறம் சாட்சியாய் 

மக்களுக்கு பகிர்கையில் 

சதிசெய்த அரசியல்!

 

அரசியலின் அநீதிக்கு 

புறம்பேசி உயிர்வளர்க்கல் 

மக்களின் அறிவின்மைமட்டுமன்றி 

கையாலாகாத்தனமும் தான் 

 

தம்மைச் சூழ்ந்த 

அதர்மச் சதியை 

அணியாய் அணைத்ததே 

அறம்பிறழ் நிலையின் மூலம் 

 

நம்பணி நல்லோர்போற்றும் 

செயல் நல்வழி வேண்டி 

தம்மணி வல்லோர்போற்றும் 

நேர்மைத் திலகமே 

 

உண்மைபகர் உத்தமரின் 

உளம் உணராவிடினும் 

ஊனம்செய் தீயோரின் 

ஈனமுணர்வதே அறிவு 

 

உள்ளதுள்ளபடி ஊருக்கு 

உரைக்கும் தர்மமிழந்து 

தத்தம் அணிசேர் 

பார்வை தீமையே 

 

போ போ போராட்டம் 

போதும் உங்கள் 

போலிப் போராட்டம் 

 

உயிர் வாழ்வதும் உரிமை பெறுவதும் 

உலகம் தோன்றியபொழுது தான் 

போராட்டம் 

 

மண்ணில் அரசு செய்து 

கல்வி மாண்பு செய்து 

நோயின் எமன் செய்து 

நேர்வழி உழைப்பை

 

இருபது ரூபாயுக்கும் 

இலவச பிட்சைகளுக்கும் 

இழந்து விட்ட ஈனர்கள் 

செய்வது !

 

போ போ போராட்டம் 

About The Author

Related posts