ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௧’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௧’ ம் நாள் (21) சனிக்கிழமை / 05.01.2019

திருவாரூரில் குக்கர் வேகுமா?, தவறு வெல்லுமா? இல்லை புயல் நிவாரணம் முக்கியமா?சபரிமலை சாமி தூங்குதா? ஆசாமி துரோகமா? அரசியல் ஆட்டமா? பேட்ட வெல்லுமா! விசுவாசம் நிக்குமா! பெட்ரோல் விலை குறையுமா? முழுசா 1௦௦௦ ஓவா கிடைக்குமா? எதை விடுவது? எதைப் பேசுவது! சந்தானம் பாணியில், ஊடகங்கள் “மாட்டினா எல்லாரும் ஒரே நேரத்தில் மாற்றானுங்க” என்று முழித்துக் கொண்டிருக்க, படம் தான் பெரிய பிரச்சினை! சில மகுடிகளுக்கு! அதுதான் தேர்தல் கமிசனே, நிவாரண உதவிகளுக்கு தடையில்லை என்று விட்டதே? படம்ங்கறது “Sticker” மட்டும்தான்; அதை மட்டுந்தான் சொன்னோம்?! 

 

உடல் தீயில் வெந்து கொண்டிருக்கும்போது, பிணம் கூட சிறிது நெண்டி நெண்டித்தான் அடங்கும்! தர்மம் தோற்கையில் முகம் திருப்பும் கயவர் நாம்!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௧’

About The Author

Related posts