Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

லக்ஷ்மி கார்டு கிளோதிங் ட்ராபி – 06.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

Logo of CDCA
Coimbatore DCA

 

கோயம்புத்தூர் – 06.10.2013 – ஞாயிற்றுக்கிழமை

PSG சர்வஜனா மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட முதல் பிரிவு லீக் போட்டியில் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் MCC முதலில் பேட் செய்து 25.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. M. சையத் இப்ராகிம் சிறப்பாக பந்து வீசி 15 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் 24.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக U. சதீஷ் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார்.

போட்டி முடிவு: ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 

PSG IMS மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட முதல் பிரிவு லீக் போட்டியில் காஸ்மோ வில்லேஜ் SA முதலில் பேட் செய்து 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. காஸ்மோ வில்லேஜ் அணியின் C. மது 61 ரன்களும், K. ஹரிஹரன் 51 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது பேட் செய்த ரெயின்போ CC அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. C. மது மற்றும் A பிரபு முறையே 42 ரன்கள் மற்றும் 12 ரன்கள் கொடுத்து தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
போட்டி முடிவு: காஸ்மோ வில்லேஜ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 

தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட முதல் பிரிவு லீக் போட்டியில் ரெயின்போ ஜீவா CC முதலில் பேட் செய்து 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக R . முரளி 65 ரன்களும், V. முத்துக்குமார் 42 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது பேட் செய்த RKS கல்வி நிலையம் ICC அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக S.R . கார்த்திகேயன் 65 ரன்கள் எடுத்தார். K.S . நிஷாத் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

போட்டி முடிவு: ரெயின்போ ஜீவா CC அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *