Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…! பகுதி-2

தமிழ்நாடு தேர்தல் 2021
தமிழ்நாடு தேர்தல் 2021
Photo Credit To VP Sriman

Story Highlights

  • ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..! பகுதி 2

பொறுப்புத் துறப்பு: இது எமது சொந்தக் கருத்து. இப்பதிவில் வாழ்ந்து முடித்தோர், வாழ்ந்து கொண்டிருப்போர் போல் தோற்றங்கள் கருத்துருவாக்கத்தால் வரலாம், வரும். அதைத் தாங்கள் தங்களைக் குறிப்பதாகக் கொளின் அதற்கு நாம் பொறுப்பில்லை!  இப்பதிவின் நோக்கம், மறைமுகமாக நல்லோரை ஆதரிப்பதும், தீயோரைத் தோலுரிப்பதும் ஆகும். அரசியல் கட்சிகள் சார்புநிலையுடையோர் நிச்சயம் இதைப் படிக்க வேண்டாம்.

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..?!

மைண்ட் வாய்ஸ்: தமிழ்நாட்டுல எங்களோட பலம் தெரியாம மோதறீங்க!

 

போராட்டம், கொள்கை, இதெல்லாம், அரசியல் ஆட்சிக்காக மட்டும் பண்றோம்னு நினைச்சீங்களா?
எங்க திறமைக்கும் அறிவுக்கும் நிகரா யாருமேயில்லை!
அதனால்தான், எங்க தலைவர் குடும்பத்தைத் தவிர, யாருமே, செல்வாக்கா வளரல!
1916ல ஆரம்பிச்ச இந்தப் போராட்டம்,

மைண்ட் வாய்ஸ்: யாருக்கெதிரா? அதைப்பற்றி யாரும் கேட்கக்கூடாது 

நாடே சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் போதே, மொழியை முன்னிருத்தி போராடினவங்க நாங்க!

 

எங்களோட நீதி, ஒரு குறிப்பிட்ட சாதியை, சாதியினரின் வளர்ச்சி மற்றும் அவர்களின் பதவியைக் குறி வைத்து செய்யப்பட்டதுன்னு, அன்று குற்றம் சொன்னவர்கள், திருத்திக்கொள்ளுங்கள்!

 

இன்று, அனைத்து சாதியினரையும் எதிர்க்கிறோம். குறிப்பிட்ட மதத்தை மட்டுமே, அப்பழக்க வழக்கங்களை மட்டுமே இழிக்கின்றோம்! என்று, இன்று சொல்பவர்கள், வருங்காலங்களில் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கும்!

 

மொழியை மட்டும் வைத்து அரசியல் செய்யலாமென்றால், “முத்தமிழ் அறிஞர் என்று நாங்களே கூறிக்கொண்டாலும்”, மாற்று மொழிக்காரன் என்று பழித்தால், என்ன செய்வது?

 

இருக்கவே இருக்கிறது: “திராவிடம்”
மைண்ட் வாய்ஸ்: "திராவிடம்" என்றால், பழைய 'ஓசி சோறு' கும்பல் வேறு, தானாக வந்து, ஒட்டிக்கொண்டு, தீராத வம்பு வழக்கில், மாற்றி விட்டு விடுகின்றது
ம்! திராவிடத்திற்கு வருவோம்! மதம், ஆன்மீகம் போன்ற பிற்போக்கு சிந்தனைகளால், எப்படி தனி மனிதன், அவனவன் தொழில் பார்க்க முடியும்!
மைண்ட் வாய்ஸ்: உங்களுக்கு 'பிரச்சினை' என்ற ஒன்று, இருந்து கொண்டிருந்தால் தானே, நாங்கள் பஞ்சாயத்து செய்ய முடியும்?
ஆனாலும் மக்களே! ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்!
நாம் நன்றாக இருக்க வேண்டுமென்றால்..?,

இந்த அரசாங்கங்கள் செய்வதைத் தடுத்தாக வேண்டும்!, எதிர்த்தாக வேண்டும்! இல்லையென்றால், ஆளும் வர்க்கம் நம்மை அடக்கியாளும்!
இவர்கள் யார், நம்மை அதிகாரம் செய்ய? அலுவல் செய்யச் சொல்ல! நமக்கு ஏவல் செய்ய வேண்டிய அரசின்று, ஆணை பிறப்பிப்பதா? வேலை செய்து பிழைப்பதா? என்ன அடக்குமுறை?

 

ஜனநாயகம் வெல்ல வாக்களிக்க வேண்டிய கட்சி, நம்ம கட்சி. எந்தக் கட்சின்னு கேக்கிறவங்களுக்கு, எங்க சின்னத்தின் பேரிலேயே, எங்கள் வருங்கால தலைவர் பேர் இருக்கு!

மைண்ட் வாய்ஸ்: எங்களைத் திருடர்கள் முன்னேற்றக் கழகம்னா சொல்றீங்க? நாங்கள் ஆட்சிக்கு வந்து, இப்பழியைத் துடைத்தெறிவோம்! 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…!

தொடரும் !

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *