April 22, 2019

My Vote! My Right!
Vote Responsibly!

மக்களவைத் தேர்தல் 2019

Lok Sabha Election 2019
Lok Sabha Election 2019

Story Highlights

  • குட்டையில் ஊறிய மட்டையில் எந்த மட்டை நல்ல மட்டை?

மக்களவைத் தேர்தல் 2019

 

தேர்தல் நாள்: 18.04.2019 (தமிழ்நாடு)

 

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! மக்கள் மன்னர்களாக உணரும் ஒரே நாள்! அதுவும் ஒவ்வொருவரும் தத்தமது வாக்கைச் செலுத்தும் நிமிடம் வரை மட்டுமே! அடிப்படையில், மக்களாட்சி என்பது, மக்கள் விருப்பம் போல் அரசமைந்து, மக்களுக்கு நன்மை பயக்கவே, இந்த ஏற்பாடு

 

மக்களில் பெரும்பான்மையினர் சுயவொழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் நேர்மை கைக்கொண்டு, பொது வாழ்வின் மேன்மை போற்றிய காலத்தில், அவர்களில் இருந்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு நேர்மையாகவும் தத்தமது மனதிற்கு உண்மையாகவும், பொதுச்சேவையில் பங்கு கொண்டனர்.

 

மக்கள் உழைப்பின் மீதும், நேர்மை, தர்மம், சுயவொழுக்கம், சுய கட்டுப்பாடு இவற்றின் மீதும், எப்போது அவ நம்பிக்கை கொண்டனரோ, பொது தர்மம் மீறிச் செயல்படத் தலைப்பட்டனரோ, அப்போதே ஊழல் ஆரம்பித்து விட்டது. அதன் தொடர்ச்சியாய், அவர்களிலிருந்து வந்தவரும் அவ்வாறே இருக்க தலைப்பட்டனர்; பொது வாழ்வின் மாண்பைக் கெடுத்தனர்!

 

மக்களவைத் தேர்தல்

பாரத நாடு, மக்களாட்சியைப் போற்றும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு! இந்த நாட்டின் செயல்கள், சாதனைகள் உலகிற்கே முன்மாதிரியாக இருக்கிறதென்றால் அது மிகையன்று! இது ஓரிரு ஆண்டுகளில் நிகழ்ந்தவை அல்ல! ஆனால் இத்தனை வருடங்களில் திட்டமிடப்பட்டு, ஒரு கொள்கையால் நடந்தனவா என்றால்? அதுவும் இல்லை!

 

பல்வேறு கலாச்சாரங்கள், உணவு, உடை, மொழி, தட்ப-வெட்ப சூழ்நிலைகளின் சரணாலயமாக விளங்கும் நமது தேசத்தின் மீது, நாம் பெருமை கொள்ளும் அதே நேரத்தில், நமது நட்பு நாடுகளுக்கு இது ஆரோக்கியமான மகிழ்ச்சியாகவும், எதிரி நாடுகளுக்கு பொறாமையாகவும் இருப்பதையும், நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பகுதிகள், மாநிலங்களாகவும், அதன் நிர்வாகம் மாநில அரசுகளிடமும், தேச நலன் சார்ந்த பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, போக்குவரத்து (நிலம், நீர், காற்று) மற்றும் இன்ன பிற பொதுப் பொறுப்புகள் மத்திய அரசினிடமும் கொடுக்கப்பட்டுள்ளன. என்னதான் மத்திய அரசாங்கம் என்றாலும், அதிலும் அனைத்து மாநிலங்களுக்கும், அவரவர் மக்கள் தொகைக்கேற்ப, சமமான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கொண்டு, அவரவர் பகுதி சார்ந்த விசயங்களில் தேசத்தோடு இணைந்து, தேச நலன் மற்றும் ஒற்றுமை பாதிக்கா வண்ணம், பலன் பெறவேண்டுமென்பதும் இவ்வேற்பாடின் அடிநாதமாகும்.

 

வாக்கு – ஒட்டு

நாம் யாருக்கு ஓட்டுப் போடப்போகிறோம்?

குழப்பமாக உள்ளதா?

மக்களை ஞாபக மறதிக்காரர்கள், இலவசத்திற்கு அலையும் பிச்சைக்காரர்கள் என்று சொல்வது நமது வாக்குகளைப் பெரும் கட்சியினர் மட்டுமல்ல, அவ்வாக்குகளைச் செலுத்தும் நமது மனசாட்சியுந்தான்!

 

Advantage ஆளும்கட்சி

பல சமயங்களில் நாம் நமது முன்னோரின் அறிவுரைகளைத் தான், தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்திக் கொள்கிறோம்!

 

குட்டையில் ஊறிய மட்டையில், எந்த மட்டை நல்ல மட்டை?

 

யார்? குறைந்த அளவில் கெடுதல் செய்துள்ளனரோ, அவரே பரவாயில்லை என்ற முடிவுக்கு வருகிறோம்! அதன் படி பார்க்கையில், கடந்த ஐந்து வருடங்களில், நடப்பு ஆளும்கட்சியின் செயல்பாடுகள், முந்தைய அரசாங்களின் செயல்திறனோடு ஒப்பிடுகையில், பரவாயில்லை இரகம் தான்! அதே அரசு இயந்திரம், கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இயங்கியதாகவே உணர்கிறோம்!

 

எதிர் கட்சிகள், எதிரி நாட்டின் கட்சிகள் போல் இயங்குவதாகவே தோன்றுகின்றன! எல்லா திருடர்களும் சேர்ந்து “எதிரிக்கு எதிரி நண்பன்” என்று செயல்படுவதாகவே தோன்றுகிறது! நாடு சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில், பெரும்பான்மையான ஆண்டுகளில், ஆட்சியில் இருந்த போது, செய்யாத, செய்யத்துணியாத நல்லவைகளை, இனி செய்வோம்! என்பதே, ஊழல் நரிகளின் மிகப்பெரிய அபத்தமாகவே தோன்றுகிறது!

 

எனவே! அரசியல்வாதிகளின் ஊழல் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது! அதில் மீன் பிடித்து (இலவசப் பிச்சைகள்) வாழும் இழிநிலைக்கு நாமும் பழகி விட்டோம்! இனி ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன?

 

எனவே, மக்களே! கண்டிப்பாக உங்கள் வாக்கைச் செலுத்துங்கள்! நீங்கள் பொறுப்பில்லாமல் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், நமது ஒவ்வொரு தனி மனிதரின், வாரிசுகளுக்கு வைக்கும் “கொள்ளி”, என்பதை மனதில் நிறுத்தி, வாக்குச் செலுத்துங்கள்!

 

நம்மால், பெரும்பாலான சமயங்களில், தரம் பிரித்தறிய முடியாவண்ணம் தேர்தல்களில், தொழில் முறை நடிகர்களும் இன்ன பிற மக்கள் மனம் கவர்பவர்களும், களம் காண்கின்றனர்! கடைசியில், எமது வாக்கைப் பெரும் தகுதி, எவருக்கும் இல்லை! (NOTA) என்றாவது பதிவு செய்யுங்கள்!

 

நாட்டின் பாதுகாப்பு, எதிர்காலம் உங்கள் ஒற்றை விரலில்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *