Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

சுய சார்பு பாரத இயக்கம் – Atma Nirbhar Bharat Abhiyaan Part 3

சுய சார்பு பாரத இயக்கம் - Atma Nirbhar Bharat Abhiyaan Part 3
சுய சார்பு பாரத இயக்கம் - Atma Nirbhar Bharat Abhiyaan Part 3

Story Highlights

  • Corporates' Government?
  • People's Government!

சுய சார்பு பாரத இயக்கம்Atma Nirbhar Bharat Abhiyaan Part 3

பொறுப்பு துறப்பு: நாம் அரசாங்கத்தின் ஊதுகுழல் இல்லை. அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் விபரம் பதியவே முனைகிறோம். இந்தப் பதிப்பின் நோக்கம், பாரத அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் பலன்களை அறிவதோடு, அதன் நன்மை தீமைகளை சீர்தூக்கிக் காண்பதுமாகும். நன்றி: PIB, Chennai இணைய தளம்.

நாட்டு மக்களுக்கு, 12.05.2020 அன்று, பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரத இயக்கம் குறித்து, நிதி அமைச்சரின் பத்திரிகை வெளியீடு மற்றும் Atma Nirbhar Bharat Abhiyaanசுயசார்பு பாரத இயக்க நிவாரணத்தொகுப்பு – பகுதி 3 குறித்து வரிசையாக பார்ப்போம்.

 

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்த மூன்றாம் கட்ட நிவாரணத் தொகுப்பு விபரம்

  • விவசாயம்
  • மீன் வளம்
  • உணவுப் பதனிடுதல் 
  • வேளாண் உள்கட்டமைப்பு தளவாடங்கள்
  • திறன் கட்டமைப்பு
  • ஆளுகை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் 

ஆகிவற்றைக் குறித்து நிதியமைச்சர் விளக்கினார். மத்திய அரசு இன்று (15.05.2020) அறிவித்த 11 நடவடிக்கைகளில், வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த 8 நடவடிக்கைகளும், சீர்திருத்தங்களுக்கு 3 நடவடிக்கைகளும் உறுதி செய்யும்.

 

சுயசார்பு பாரத இயக்க நிவாரணத் தொகுப்பு – பகுதி 3

மேம்பாட்டுத்திட்டங்கள்

  • விவசாயிகளுக்கான பண்ணை – வாயில் உள்கட்டமைப்பிற்கு கடன் வசதி – ரூ. 1 இலட்சம் கோடி

    • பண்ணை – வாயில் ஒருங்கிணைக்கும் இடங்கள் (ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோர், புது நிறுவனங்கள் [ஸ்டார்ட் அப்], இன்னும் பல), கட்டுபடியாகும் மற்றும் நிதி ரீதியாக சாத்தியமாகக்கூடிய அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, நிதியம் உருவாக்கப்படும்.

 

  • குறு உணவு நிறுவனங்களை முறைப்படுத்த திட்டம் – ரூ. 10000 கோடி

    • உலகளாவிய விற்பனைக் குறிக்கோளை உள்நாட்டு நிறுவனங்கள் அடைய, தர நிர்ணயங்களை அடைவதற்கும், வர்த்தகக் குறியீட்டை நிர்மானிக்கவும், சந்தைபடுத்துதல் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கும், சுமார் 2 இலட்சம் குறு உணவு நிறுவனங்கள் (MFE) பயன்பெறும் வகையில் திட்டம் உருவாக்கப்படும். 
    • ஏற்கனவே உள்ள
      • குறு உணவு நிறுவனங்கள்
      • விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள்
      • சுய உதவிக் குழுக்கள்
      • கூட்டுறவுகள் ஆகியவற்றிற்கு ஆதரவு நல்குவதோடு
    • கூடுதல் பட்டியல் வகுப்பினர் / பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்கள் மீதும், முன்னேறும் உத்வேகம் உள்ள மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்தி தொகுப்பு ரீதியான (உதாரணமாக: உத்திரப்பிரதேசத்தில் மாம்பழம், கர்நாடகாவில் தக்காளி, ஆந்திரப்பிரதேசத்தில் தக்காளி, மகாராஷ்டிராவில் ஆரஞ்சு இன்னும் பல) அணுகுமுறை கடைபிடிக்கப்படும்.

 

  • பிரதமரின் மத்சய சம்பட யோஜ்னா திட்டம் (PMMSY) மூலம் மீனவருக்கு உதவி – ரூ. 20000 கோடி

    • கடல்வளம், உள்நாட்டு மீன்வளங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புச் செயல்பாடுகளுக்கு ரூ. 11000 கோடி நிதியுதவி
    • மீன்பிடி துறைமுகங்கள், குளிர் பதன வசதிகள் மற்றும் சந்தைகள் போன்ற உள்கட்டமைப்பிற்கு ரூ. 9000 கோடி நிதியுதவி
    • கூண்டுக்குள் உயிரின வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு, அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் புதிய மீன்பிடி கலங்கள், தடமறியும் திறன், ஆய்வகக் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு முக்கியதத்துவம் அளிக்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் உதவும் தனி நபர் காப்பீடு மற்றும் படகுக் காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
    • 5 ஆண்டு காலத்தில், 70 இலட்சம் டன் கூடுதல் மீன்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் சுமார் 55 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி ரூ. 1 இலட்சம் கோடி இலக்கு எட்டப்படும்.
    • தீவுகள், இமயமலைப் பகுதி மாநிலங்கள், வட கிழக்கு மற்றும் முன்னேறும் உத்வேகம் உள்ள மாவட்டங்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

 

  • தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத்திட்டம் – ரூ. 13343 கோடி

    • கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • சுமார் 53 கோடி விலங்குகளுக்கு (மாடுகள், எருமை, செம்மறியாடு, ஆடுகள் மற்றும் பன்றி வகையறாக்களுக்கு), கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக 100% நோய்த்தடுப்பு மருந்தேன்றத்தை உறுதிப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை சுமார் 1.5 கோடி மாடுகள் & எருமைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

 

  • கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் – ரூ. 15000 கோடி

    • பால் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், கால்நடைத் தீவனக் கட்டமைப்பு போன்றவற்றில் தனியார் முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் விதமாக கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும். சிறப்புப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆலைகள் அமைப்பதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

 

  • மூலிகை சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் – ரூ. 4000 கோடி 

    • மருத்துவ தாவர சாகுபடித் திட்டத்தின் கீழ், தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம், ஏற்கனவே 2.25 இலட்சம் ஹெக்டர் பரப்புக்கு ஆதரவு அளித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், சுமார் 10 இலட்சம் ஹெக்டர் பரப்பு மூலிகை சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் ரூ.5000 கோடி அளவில் வருமானம் ஈட்டுவர். மேலும் மருத்துவத் தாவரங்களுக்கு, மண்டல மண்டிகள் கட்டமைப்பு உருவாக்கப்படும். தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம், கங்கை நதிக்கரை ஓரத்தில் மருத்துவத் தாவரங்கள் வளாகச் சாலையமைக்க, 800 ஹெக்டர் நிலம் அளிக்கும்.

 

  • தேனீ வளர்ப்பு முயற்சி – ரூ. 500 கோடி 

    • தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள, சுமார் 2 இலட்சம் பேரின் வருமானம் அதிகரிக்கவும், நுகர்வோருக்கு தரமான தேன் கிடைப்பதை உறுதி செய்யவும் கீழ்காணும் திட்டம் செயல்படுத்தப்படும்
      • ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மையங்கள், சேகரிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் சேமிப்புக் கிடங்கு மையங்கள், தேன் எடுத்த பிறகு மதிப்புக் கூட்டும் வசதிகள் போன்றவை
      • தரங்கள், தடமறிதல் நடைமுறைகள் மேம்படுத்துதலை அமல் செய்தல்
      • பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திறன் வளர்ப்பு
      • மையமாக்கிய கையிருப்பு மற்றும் தேனீ இனப்பெருக்க மையங்களைத் தரம் உயர்த்துதல்

 

  • தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (TOP – Tomato, Onion, Potato) விவசாயம் – மதிப்பீடு ரூ.500 கோடி

    • உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் “ஆபரேஷன் பசுமைத் திட்டம்”, தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளில் இருந்து, அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
    • உபரியாக உள்ள சந்தைகளிலிருந்து, குறைவாக உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான செலவில் 50% மானியம், பதப்படுத்துதல் உள்ளிட்ட சேமிப்புகளுக்கு 50% மானியம் அளிக்கப்படும்.
    • 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில், இத்திட்டம் அமல் செய்யப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, நீட்டிக்கப்படும்.
    • இதன் மூலம், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தல், குறைவான வீணாக்குதல், வாங்கக்கூடிய விலையில், நுகர்வோருக்கு பொருள்களைக் கிடைக்க உதவும். 

 

  • சீர்திருத்தங்கள்

  • அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்கள்

    • விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.
    • தானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய வேளாண் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
    • தேசியப் பேரிடர்கள், பஞ்சம் போன்ற அசாதாரண காலங்களில் மட்டுமே, சேமிப்புக் கட்டுப்பாடுகள் விலை ஏற்றதுடன் அமல்படுத்தப்படும்.
    • அதுமட்டுமல்லாமல், பதப்படுத்துவோர் அல்லது மதிப்பு சங்கிலியில் பங்கு பெறுவோருக்கு, அவர்களின் நிறுவப்பெற்ற திறன் அடிப்படையிலும், எந்த எற்றுமதியாளருக்கும், ஏற்றுமதி தேவை அடிப்படையிலும் எந்த விதமான சரக்குக் கட்டுப்பாடும் பொருந்தாது.

 

  • வேளாண் சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்கள்

    • விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் தேர்வுகளை அளிக்கும் விதமாக, சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.
    • சிறந்த விலையில் பொருள்களை விற்க, விவசாயிகளுக்குப் போதுமான சந்தைத் தேர்வுகள்.
    • மாநிலங்களுக்கு இடையே தடையில்லா வணிகம்.
    • வேளாண் பொருட்களின் மின் வணிகத்திற்கான கட்டமைப்பு

 

  • வேளாண் பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் தர உத்திரவாதம் 

    • நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் பதப்படுத்துவோர், ஒருங்கிணைப்பாளர்கள், பெரு வணிகர்கள் மற்றும் எற்றுமதியாளர்களுடன் விவசாயிகள் சேர்ந்து செயல்படுவதற்கான, உதவிகரமான சட்ட வரையறை உருவாக்கப்படும்.
    • இந்தச் சட்ட வரையறையின் சாரம்சம், விவசாயிகளுக்கு ஆபத்து வாய்ப்பைக் குறைத்தல், உத்தரவாதமான விலை கிடைத்தல் மற்றும் தரம் நிலைப்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாய் இருக்கும்.

 

தலைவரே! விவசாயம் குறித்தான தமது அறிவிப்புகள், அடிப்படையில் புரியாவிடினும், சட்டம் வழங்கும் சாதகங்கள், இடைத்தரக வணிகத்தை பெரிதும் ஊக்குவிப்பதாகவும், ஏற்றுமதியை தடையின்றி நடைமுறைப்படுத்த முயல்வதாகவே தோன்றுகிறது! 

 

“Corporates’ Government – பெரு நிறுவனங்களின் அரசாங்கம்” என்ற தமது அரசாங்கத்தின் மீது வீசப்படும் விமர்சனம் உண்மையோ? என்றே எண்ணத்தோன்றுகிறது. பணத்தையும், புகழையும் தின்று வாழ முடியுமென்பது? கண்கெட்ட பின், சூரிய வணக்கத்திற்கு ஒப்பாகும்! அது சரி! மே மாதமும், ஜூன் மாதமும், ரூ.1000 கொடுத்திருந்தா, நாங்க இதையெல்லாம் எதுக்கு யோசிக்கப் போறோம்? 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *